Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஒரே மாதத்தில் 62% உயர்ந்த ஹைவே இன்ஃப்ரா பங்கு

ஒரே மாதத்தில் 62% உயர்ந்த ஹைவே இன்ஃப்ரா பங்கு

மத்திய பொதுப்பணித் துறையிடமிருந்து ரூ.198.31 கோடி மதிப்பிலான கட்டுமான ஒப்பந்தத்தை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஹைவே இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு மாதத்தில் 61.76 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்திய பொதுப்பணித் துறையிடமிருந்து ரூ.198.31 கோடி மதிப்பிலான கட்டுமான ஒப்பந்தத்தை இந்நிறுவனம் பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கான குடியிருப்பு மற்றும் இதர கட்டிடங்களை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும்.

இதன்மூலம் நிறுவனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு ரூ.1,776.19 கோடியாக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து ரூ.431.86 கோடி மதிப்பிலான இரண்டு சுங்கக் கட்டண வசூல் ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது.

மேலும், ரூ.49 கோடி நிதி திரட்டும் திட்டம், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்கும் முடிவு ஆகியவையும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளன. நவம்பர் 4-ம் தேதி வர்த்தகத்தின்போது பங்கு ரூ.73.89 வரை உயர்ந்தது

முந்தைய செய்தி
ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு - சாய்ஸ் இன்டர்நேஷனல் அறிவிப்பு
அடுத்த செய்தி
செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் லாபம் 46% உயர்வு

தொடர்புடைய செய்திகள்